பாடசாலைக்கீதம்
பல்லவி
வாழ்க வாழ்கவே என்றும் வாழ்க வாழ்கவே
வளமிகுந்த கல்வித்தீப சுடரினாலே எம்மைக்காத்து
வாழ்க வாழ்கவே என்றும் வாழ்க வாழ்கவே
சரணங்கள்
அன்பு அறிவு பண்புநல்ல ஒழுக்கம் தெய்வ பக்தியும்
அறம் விரும்பும் நெஞ்சினோடு தேச பக்தி யாவையும்
இனிமையான மொழியினாலே எங்களுக்கு ஊட்டிடும்
இராமநாதன் மகா வித்தியாலயமாம் அன்னையே
(வாழ்க)
அன்னை மொழி செந்தமிழ் அவனி போற்றும் ஆங்கிலம்
பல்கலை விஞ்ஞானம் விவசாய விளையாட்டுக்கள்
சொல்லரிய நன்மை தரும் சமய உண்மையாவையும்
செம்மையாகப் போதித்தெம்மை ஜெகம் புகழச் செய்யும் அன்னை
(வாழ்க)
செந்தமிழர் சேர்ந்து வாழும் செழுமைமிக்க உசனிலே
கந்தவேளின் கருணையோடு கல்வியைப் பரப்பவே
எந்தை போல் இலங்குகின்ற இராமநாத வள்ளலின்
இலட்சியத்தின் சின்னமாக எண்திசையும் போற்றவே
(வாழ்க)