அன்பான உசன் இராமநாதன் பழைய மாணவர்களே,
உசன் இராமநாதன் மகாவித்தியாலய தேவைக்கென உசன் பவுண்டேசனால் கொள்வனவு செய்யப்பட்ட காணியினைப்பற்றி இந்த தளத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
இந்த காணி கொள்வனவு செய்ததற்கான நிதிப் பங்களிப்புக்கள் ஏற்கனவே உரிய வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உசன் இராமநாதன் பழைய மாணவர்களே, உங்களுடைய உதவியை நாடி, இந்த பதிவை இங்கே பதிவிடுகின்றோம்.
*உங்கள் ஒவ்வொருவரதும் நினைவழியாத் தடங்களும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய வரலாற்றுப் பதிவுத் தடங்களாக நிறுவப்பட்டு பேணப்படும்.*
உங்களிடமிருந்து பெறப்படும் நன்கொடையானது இந்தக்காணி கொள்வனவு செய்யப்பட்டதுக்கே பயன்படுத்தப்படும் என்பதை தெளிவுபடுத்துகின்றோம். மீதமாகும் தொகை.. URMV Old Students Trust Account as an untouched deposit ஆக பேணிப் பாதுகாக்கப்படும்.
உங்களுடைய நன்கொடையை இந்த தளத்திலையோ, அல்லது தனிப்பட்டரீதியாகவோ அறியத்தரவும்.
இப்படிக்கு,
உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்
சிவலோகநாதன் ஜெகன் ( ராணி teacher’s son)- UK, சர்வதேச இணைப்பாளர்.
| ReplyForward |